மேலும் செய்திகள்
பள்ளி மாணவி தற்கொலை
16-Aug-2025
புதுச்சேரி : பள்ளி மாணவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, இளங்கோ நகரை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மகள் ரோஷினி,17; லாஸ்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவர், சில தினங்களாக படிக்க பிடிக்கவில்லை என கூறி வந்தார். அவரை, அவரது பெற்றோர் சமாதானப்படுத்தி வந்தனர். நேற்று காலை ராஜசேகரன், ரோஷினியை எழுப்பி படிக்க சொல்லிவிட்டு, நடைபயிற்சிக்கு சென்றுவிட்டார். சற்று நேரம் கழித்து அவரது தாய், ரோஷினியை பள்ளிக்கு கிளம்ப சொல்வதற்காக அறைக்கு சென்றபோது கதவு உட்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. வெகுநேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, ரோஷினி துாக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடன் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து, அவர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். இதுகுறித்து ராஜசேகர் அளித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Aug-2025