உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குருவிநத்தம் பள்ளியில் பரிசளிப்பு விழா

 குருவிநத்தம் பள்ளியில் பரிசளிப்பு விழா

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது. விழாவில், ஆசிரியை கோமளா வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் இரிசப்பன் நோக்கவுரையாற்றினார். ஆசிரியர்கள் சாமுண்டீஸ்வரி, சங்கரதேவி, தேவி, வனிதா, திவ்யா, செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், மாநில அளவில் நடந்த பாடல் போட்டியில் இரண்டாமிடம், வட்டார அளவிலான நாடகப் போட்டியில் முதலிடம், வினாடி வினாப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் குபேரன், சுகந்தி, அருளரசி, அகிலாண்டேஸ்வரி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். ஆசிரியை ரேவதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை