பெத்தாங் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கல்
புதுச்சேரி: மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி வெற்றிபெற்ற அணிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா பரிசு வழங்கினார்.கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, புதுச்சேரி தி.மு.க., விளையாட்டு மேம்பட்டு அணி சார்பில், 16 ம் ஆண்டு மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி உழவர்கரை பி.எல்.டி ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது.அருமைச்செல்வம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்துகொண்டு, முதலிடம் பிடித்த சி.எஸ்.பி அணியை சேர்ந்த சத்யராஜ், வேந்தன் ஆகியோருக்கு கோப்பையும், ரூ. 14 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கினார்.இரண்டாம் இடம் பிடித்த எஸ்.பி.கியூ.என் அணியை சேர்ந்த ராஜ்குமார், தமிழ்வேல் ஆகியோருக்கு கோப்பைகள் மற்றும் ரூ. 12 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் மொத்தம் ரூ. 85 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.விழாவில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில அமைப்பாளர் ரவிச்சந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் எமிலன் செய்திருந்தார்.