மேலும் செய்திகள்
மாநில கபடி போட்டி
30-Apr-2025
வில்லியனுார்: கூடப்பாக்கத்தில் நடந்த தென் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தில் அர்ஜுனா ஹாக்கி கிளப் சார்பில், தென் மாநில அளவிலான இரண்டாம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஹாக்கி போட்டி நடந்தது. இந்த போட்டியில் புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.நாக் அவுட் முறையில் நடந்த இப்போட்டியில் முதலிடத்தை கூடப்பாக்கம் அர்ஜுனா ஹாக்கி கிளப் அணியும், இரண்டாம் இடத்தை பெங்களூரு எம்.இ.ஜி., அணியும், மூன்றாம் இடத்தை மதுரை திருநகர் ஹாக்கி கிளப் அணியும் மற்றும் நான்காம் இடத்தை தர்மாபுரி பாலக்கோடு ஹாக்கி கிளப் அணியும் கைப்பற்றின.போட்டியினை அர்ஜுனா ஹாக்கி கிளப் கவுரவ தலைவர் கோனேரி தாமோதரன் துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு பா.ஜ., தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய்ஜெ தியாகராஜன், முன்னாள் பா.ஜ., தொகுதி தலைவர் அய்யனார், ஜவகர் கல்விக் குழும நிறுவனர் சிவராஜன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.விழாவில் அர்ஜுனா ஹாக்கி கிளப் நிறுவனர் ராம், ஆலோசகர் ராஜா, லீ புதுச்சேரி சங்க நிர்வாகிகள் தலைவர் குமரேசன், செயலாளர் அன்பழகன், முன்னாள் இந்திய அணி ஹாக்கி வீரர் செந்தில், பழனி, சேகர் மற்றும் கூடப்பாக்கம் ஹாக்கி அணி நிர்வாகிகள் பச்சையப்பன், சதீஷ், ராணி, கருணாகரன், பாபு, மல்லிகா, முருகன், புஷ்பராஜ், கார்த்தி, சிவா, லட்சுமணன், ராமநாதன், அரவிந்த், பிரவீன், ஹரிஷ், அருணாச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கூடப்பாக்கம் அர்ஜூனா ஹாக்கி கிளப் நிர்வாகிகள் செய்தனர்.
30-Apr-2025