மேலும் செய்திகள்
Breaking நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மரணம்
15-Aug-2025
புதுச்சேரி: பதவி மற்றும் ஊதிய உயர்வு வழங்க கோரி, அரசு கல்லுாரி பேராசிரியர்கள் ஊர்வலமாக சென்று, கவர்னர் அலுவலகத்தில் மனு அளித்தனர். புதுச்சேரி அரசு கல்லுாரிகளில் பணி செய்யும் பேராசிரியர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளாக பதவி மற்றும் ஊதிய உயர்வு வழங்காமல் இருந்து வருகிறது. ஆறாவது ஊதியக்குழுவின் ஊதியமும் அமல்படுத்தாமல் உள்ளது. அதனை கண்டித்து, புதுச்சேரி அரசு கல்லுாரிகளின் பேராசிரியர்கள் கூட்டு போராட்டக்குழு சார்பில், நேற்று மாலை ஊர்வலம் சென்றனர். பேராசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சங்கரய்யா முன்னிலை வகித்தார். ஊர்வலம் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் இருந்து புறப்பட்டு, அஜந்தா சிக்னல், நேரு வீதி வழியாக சென்று கவர்னர் மாளிகை முன், நிறைவடைந்தது. தொடர்ந்து, பேராசிரியர்கள், கோரிக்கை மனுவை, கவர்னர் அலுவலகத்தில் அளித்தனர். புதுச்சேரி, காரைக்கால் அரசு கல்லுாரிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
15-Aug-2025