உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரம் வளர்த்தல் குறித்த நிகழ்ச்சி

மரம் வளர்த்தல் குறித்த நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த மரம் வளர்த்தல் சம்மந்தமான நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரி, வ.உ.சி மேல்நிலைப்பள்ளியில், நேற்று காலை ரோட்டரி கிளப் ஆரோ சிட்டி சார்பில், 'வனம் காப்போம்' நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் பள்ளி பொறுப்பாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார்.இந்த நிகழ்வில், கவிஞர் இளவரசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினார். மரம் வளர்ப்பது சம்மந்தமான நாடகங்கள் பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்டது. இதில் கிளப் நிர்வாகிகள், பள்ளி விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை