உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் தடையை கண்டித்து கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

மின் தடையை கண்டித்து கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

பாகூர்: பாகூரில் மா.கம்யூ., கட்சியின், பாகூர் கொம்யூன் கமிட்டி கூட்டம், பக்தவச்சலம் தலைமையில் நடந்தது. செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன், சரவணன், கலியன், இளவரசி, ஹரிதாஸ், வடிவேலு, சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பாகூர் பகுதியில் தொடர் மின் தடையை கண்டித்து, நாளை (25ம் தேதி) வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், மறுநாள் 26ம் தேதி பாகூர் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.கொம்யூன் செயலாளர் சரவணன் கூறுகையில் 'பாகூர் நகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக முன்னறிவிப்பின்றி மின் தடை ஏற்படுகிறது. இதனால், அனைத்து தரப்பினரும் பாதிக்கின்றனர். என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், மக்கள் விரோத செயலை செய்வது கண்டிக்கத்தக்கது.தொடர் மின் தடையை கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, பாகூர் மின் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை