உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உள்ளாட்சி துறை இயக்குனரை முற்றுகையிட்டு போராட்டம்

உள்ளாட்சி துறை இயக்குனரை முற்றுகையிட்டு போராட்டம்

புதுச்சேரி : நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டு போராட்ட குழு, கோரிக்கைகளை வலியுறுத்தி, உள்ளாட்சி துறை இயக்குனரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் உள்ளாட்சித் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு 7வது, ஊதியக்குழு பரிந்துரைப்படி 33 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, உள்ளாட்சித்துறை அலுவலகம் முன், 5வது நாளாக நேற்று ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், திடீரென புதுச்சேரி நகராட்சியில், உள்ள இயக்குனர் அலுவலகத்தை ஊழியர்கள் நேற்று மதியம் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்ட குழு கன்வீனர் வேளாங்கன்னிதாசன் தலைமையில், ஆனந்த கணபதி, கலியபெருமாள், சகாயராஜ், மண்ணாதான், முருகையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படாததால், நாளை மறுநாள் முதல் வழக்கம் போல், தொடர்ந்து , காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். உள்ளாட்சி துறை இயக்குனரை, ஊழியர்கள் முற்றுகையிட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி