உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

மனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி; மங்கலம் தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்ககோரி கலெக்டர் அலுவலகம் எதிரே பொது மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி, மங்கலம் தொகுதிக்குட்பட்ட திருக்காஞ்சி, அரியூர், கீழ்சாத்தமங்கலம் மற்றும் பெருங்களூர் கிராமத்தில் வசித்து வரும் பொது மக்கள் தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்ககோரி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான தேனீ ஜெயகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து, அமைச்சர் இலவச மனைப்பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் இதுவரையில் இலவச மனைப்பட்டா வழங்குவதற்கான எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனை கண்டித்து, மங்கலம் தொகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் உடனடியாக தங்களது கிராமத்திற்கு இலவச மனைப்பட்டா வழங்கங்கோரி நேற்று காலை கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கலெக்டர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி