உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டோக்களுக்கு மலர் வளையம் வைக்கும் போராட்டம்

ஆட்டோக்களுக்கு மலர் வளையம் வைக்கும் போராட்டம்

புதுச்சேரி : புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஆட்டோக்களுக்கு மலர் வளையம் வைத்து, ஏ.ஐ.டி.யூ.சி., ஆட்டோ சங்கம் சார்பில், எல்லைப்பிள்ளை சாவடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆட்டோ சங்க மாநில மாநிலத் தலைவர் சேகர், பொதுச் செயலாளர் சேதுசெல்வம், பொருளாளர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'பெட்ரோல், டீசல் விலை உயர்வால், கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் ஆட்டோக்களை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்வர்.இதனால் இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். ஆட்டோ கட்டண நிர்ணயத்திற்கு, 'செயலி' உருவாக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, அரசு தெரிவித்தது. ஆனால் இதையும் செயல்படுத்தவில்லை. மொத்தத்தில் அரசு ஆட்டோ தொழிலை முடக்கி, சமாதி கட்டி மலர்வளையம் வைக்கும் வேலையை செய்து வருகிறது. இதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டம் நடந்தது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !