உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகரில் உள்ள கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் எதிரே பொது நல அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்ணாடிப்பட்டு கொம்யூன், சன்னியாசிக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் மோசடி நடந்துள்ளதாக, முதல்வர், கூட்டுறவு பதிவாளர், செயலாளர் ஆகியோருக்கு பொதுநல அமைப்புகள் மூலம் புகார் அளிக்கப்பட்டது. அதன் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.இதனை கண்டித்தும், சன்னியாசிக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பல்வேறு பொதுநல அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, கூட்டுறவு பதிவாளர் யஷ்வந்தையாவிடம் புகார் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை