உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்

 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்

புதுச்சேரி: தமிழக துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவிகள் மற்றும் பெண்களுக்கு சைக்கிள்களை முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் வழங்கினார். முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட டி.வி., நகர் கிளை கழகத்தில் படிக்கும் 15 மாணவி கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் 25 பேர் என 40 பேர்களுக்கு இலவச சைக்கிள் களை முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் சொந்த செலவில் வழங்கினார். முத்தியால்பேட்டை, செயின்ட் சிமோன் பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடந்த விழாவில் தி.மு.க., நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி