நோய் குணப்படுத்த நிதி உதவி வழங்கல்
வில்லியனுார் : புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தொடர் நோய் குணப்படுத்த நிதி உதவியை சிவா எம்.எல்.ஏ., வழங்கினார். புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தொடர் நோயால் பாதிக்கப்பட்ட வில்லியனுார் தொகுதியை சேர்ந்த பயனாளி களுக்கு சிகிச்சை பெறுவதற்கான உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனுார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகிகள் மணிகண்டன், ராமசாமி, செல்வநாதன், ஜலால், ரமணன், குலசேகரன், செல்வநாதன், ஹாலித், பழனிசாமி, கதிரவன், சரவணன், ராமதாஸ், சுப்பிரமணியன், ஏழுமலை, அக்பர், காளிதாஸ், ராமஜெயம், சேகர், அஞ்சாபுலி, ரகு, சந்தோஷ், நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.