சாலை வாசிகளுக்கு உணவு வழங்கல்
புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உணவு வழங்கியது.தீபாவளியன்று பெரும்பாலான உணவகங்கள் மற்றும் கடைகள் இருப்பதில்லை. நேற்றும் வழக்கம் போல, கடைகள் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில், தட்டாஞ்சாவடி, இந்திரா சிக்னல், ராஜிவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அருகில், புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சார்பில் நேற்று, சுடச்சுட உணவு வழங்கப்பட்டது.சாலையோரம் வசிப்பவர்கள், கூலித்தொழிலாளர்கள், முதியோர்கள் மற்றும் நரிக்குறவர்கள் உட்பட, மொத்தம் , 150 பேருக்கு காலை உணவாக இட்லி மற்றும் கறிக்குழம்பு வழங்கப்பட்டது.புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி தலைமையில் நிர்வாகக் குழு உறுப்பினர் அய்யனார், ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம், உறுப்பினர்கள் பெருமாள், சரவணன் மற்றும் தன்னார்வலர்கள் உணவு வழங்கினர்.