மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு
14-Dec-2025
புதுச்சேரி: புதுச்சேரி பிரான்சிஸ்கன் சிஸ்டர்ஸ் ஆப் செயின்ட் அலோசியஸ் கொன்சாகா தலைமையகத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. உயர்மட்ட தலைவி திரேசா ஞானமணி, உயர் ஆலோசகர் பாப்பாத்தி, பொருளாளர் பவுலின் சகாயராணி, செயலாளர் ஷாலினி சைலஜா ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் முன்னிலையில் கன்னியர் இல்ல சகோதரிகள் கேக் வெட்டினர். சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் பிரதீஷ் இருதயராஜ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி, துாய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.
14-Dec-2025