உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல் 

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல் 

திருக்கனுார்:காட்டேரிக்குப்பம், இந்திராகாந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில், பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, தலைமை ஆசிரியர் அரிகோவிந்தன் தலைமை தாங்கினார். ஆசிரியை கீதாஞ்சலி வரவேற்றார். காட்டேரிக்குப்பம் சம்பத் குடும்பத்தினர், சொந்த செலவில்10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினர். தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் அடையாள அட்டை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவர்களின் பயண செலவை முழுமையாக ஏற்பதாக தெரிவித்தனர். உடற்கல்வி ஆசிரியர் பாலசங்கர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியை உதயபானு, கலைவாணி, மேர்லின், சுகுணா, விஜயலட்சுமி, சுஜா, மலர், நஸ்யா, வெங்கடேசன், ருக்மணி, கலைவாணி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை