மேலும் செய்திகள்
கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
08-Mar-2025
புதுச்சேரி : புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான 2024-25 ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது.முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, 561 பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் 19,893 மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாக 21 கோடியே 89 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகையை வழங்கினார்.இதில், அமைச்சர் சாய் சரவணன்குமார், துறை இயக்குநர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
08-Mar-2025