உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்

புதுச்சேரி : மங்கலம் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டரை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார்.புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில், அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் இலவச ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மங்கலம் தொகுதியைச் சேர்ந்த 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சமூக நலத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், பயனாளிகளுக்கு ஸ்கூட்டரை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இணை இயக்குனர் ஆறுமுகம், அலுவலர் சுருதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ