உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கல்

பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் வில்லியனுார் சட்டசபை தொகுதி பயனாளிகளுக்கு முடிதிருத்தும் உபகரணங்கள், நாவித கலைஞர்களுக்கு நாதஸ்வரம், தவில் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வில்லியனுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு அரசு உபகரணங்களை வழங்கினார். இதில், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் கோபி, தொகுதி பொருளாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிளை நிர்வாகிகள் ராஜி, முருகன், காசிநாதன், கமல்பாஷா, கோவிந்தஸ் ராஜ், முருகேசன், ராஜா முகமது, மனோகர், முத்து, பாலகுரு, கோதண்டம், சூர்யா, கோபி, அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை