மாணவர்களுக்கு சீருடை வழங்கல்
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அருள் வரவேற்றார். சபாநாயகர் செல்வம் மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் தையல் கட்டணம் வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியர் ஆனந்தன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜோதி, சண்முகபிரியா, சுப்ரமணியன், லட்சுமி, கணபதி, மஞ்சுளா, மனோசித்ரா ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் சுப்ரமணி நன்றி கூறினார்.