நலத்திட்ட உதவி வழங்கல்
திருபுவனை: திருபுவனை தொகுதி தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.கலிதீர்த்தாள்குப்பம் மாரியம்மன் கோவில் திடலில் நடந்த விழாவிற்கு, இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் கபிலன்அல்லிமுத்து தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் பார்த்திபன், தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி, பொதுக்குழு உறுப்பினர் பழனி, வட்டார காங்., தலைவர் ஜெயக்குமார், காங்., நிர்வாகிகள் மணிமாறன், வேலாயுதம், அழகிரி முன்னிலை வகித்தனர். தி.மு.க., கிளை செயலாளர் அல்லிமுத்து வரவேற்றார்.மாநில அமைப்பாளர் சிவா 300 பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை, குடை மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் மாநில அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மாநில துணை அமைப்பாளர் கல்யாணிகுமார், காங்., மாநில பொதுச்செயலாளர் தனுசு, மா.கம்யூ., கொம்யூன் செயலாளர் அன்புமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். காங்., வட்டார செயலாளர் அழகிரி நன்றி கூறினார்.