உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மேலாண் இயக்குநர் அலுவலகத்தை பி.ஆர்.டி.சி., தொழிலாளர்கள் முற்றுகை

மேலாண் இயக்குநர் அலுவலகத்தை பி.ஆர்.டி.சி., தொழிலாளர்கள் முற்றுகை

புதுச்சேரி: பணி நிரந்தரம் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பி.ஆர்.டி.சி., தொழிலாளர்கள் நேற்று, மேலாண் இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.ஆர்.டி.சி., தொழிலாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் 7 வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 28ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் போராட்டத்தின் 8ம் நாளான நேற்று பி.ஆர்.டி.சி., பணிமனையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தொழிலாளர்கள், நெல்லித்தோப்பு வழியாக ஊர்வலமாக, நுாறடி சாலையில் மேலாண் இயக்குநர் மற்றும் போக்குவரத்து ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நுழைவு வாயில் அருகே தடுத்து நிறுத்தினர். அங்கு தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷமிட்டனர். பெண் கண்டக்டர் திடீர் மயக்கம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த கண்டக்டர் சிவசக்தி திடீரென மயங்கி விழுந்தார். அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு, ஆம்புலன்சில், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் கண்டக்டர் மயங்கி விழுந்ததால், போராட்டத்தில் திடீர் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை