மேலும் செய்திகள்
போதையில் தகராறு வாலிபர் கைது
21-Oct-2024
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அடுத்த சுத்துக்கேணி ஏரிக்கரை அருகே வாலிபர் ஒருவர் குடிபோதையில், அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.அதில், தமிழகப் பகுதியான எறையூர், அம்பேத்கர் வீதியை சேர்ந்த ஜெயக்குமார், 19; என்பது தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
21-Oct-2024