உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்

புதுச்சேரி : கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில், கலெக்டர் குலோத்துங்கன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றார். புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான மக்கள் குறைதீர்ப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காலை 10 மணி முதல் 12 மணி வரை நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். இதில், கடந்த மாதம் நடந்த குறைதீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, இம்மாதத்திற்கான மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் சிறப்பு அதிகாரி குமரன், வருவாய் அதிகாரி ஸ்ரீஜித் மற்றும் தாசில்தார்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ