உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருபுவனை காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

திருபுவனை காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

திருபுவனை: திருபுவனை காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்வு சிறப்பு முகாம்நடந்தது.புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வாரந்தோறும் சனிக்கிழமை பொதுமக்கள் சிறப்பு குறைதீர்வு முகாம் நடந்து வருகிறது. அதன்படி, திருபுவனை காவல் நிலையத்தில் புதுச்சேரி மேற்குப் பகுதி போலீஸ் எஸ்.பி., வம்சிதரெட்டி தலைமையில் குறை தீர்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.முகாமில் காவல் நிலைய அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு ரோந்துப் பணியை தீவிர படுத்த வேண்டும். போதை மற்றும் கஞ்சா குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்.பி., வம்சிதரெட்டிஅறிவுறுத்தினார்.இம்முகாமில் திருபுவனை காவல் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பங்கேற்ற பொதுமக்களிடம் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய எஸ்.பி., வம்சிதரெட்டி, இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ