மேலும் செய்திகள்
சபாநாயகருக்கு இளைஞர் காங்., கண்டனம்
08-Oct-2024
புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகரை கண்டித்து, பொது நல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த நேரு எம்.எல்.ஏ., வகித்து வந்த, சட்டசபை உறுதி மொழி குழு தலைவர் பதவி சமீபத்தில் பறிக்கப்பட்டது. இப்பதவியை பறித்த சபாநாயகர் செல்வத்தை கண்டித்து, பொதுநல அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அண்ணாதுரை சிலை அருகே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழகர் தலைமை தாங்கினார். தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த பிரகாஷ், மனித நேய மக்கள் சேவை இயக்கம் விநாயகம், பாவாடராயன் முன்னிலை வகித்தனர்.மா. கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம் கண்டன உரையாற்றினார். வி.சி., கட்சி உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
08-Oct-2024