மேலும் செய்திகள்
ரயிலில் சிக்கி கள்ளக்குறிச்சி நபர் பலி
13-Mar-2025
வில்லியனுார்: வில்லியனுார் அருகே வாய்க்காலில் பொதுப்பணித்துறை ஊழியர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் புதிய பைபாஸ், வி.மணவெளி சாலை நான்குமுனை சந்திப்பு வாய்க்காலில் நேற்று மாலை ஆண் சடலம் ஒன்று மிதந்தது. தகவலறிந்த வில்லியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு விசாரித்தனர். அதில், வி.மணவெளியை சேர்ந்த விஜயகுமார், 50; என்பதும், பொதுப்பணித்துறை கொம்பாக்கம் குடிநீர் டேங்க் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்ததும் தெரிந்தது. குடிப்பழக்கமுடைய இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்பி வரவில்லை என தெரியவந்தது.போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
13-Mar-2025