உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 20 சவரன் நகை திருடிய வேலைக்காரி கைது: போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

20 சவரன் நகை திருடிய வேலைக்காரி கைது: போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

புதுச்சேரி : துணிக்கடை அதிபர் வீட்டில் 3.5 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடிய வேலைக்காரியை ஒன்றரை மணி நேரத்தில் கைது செய்த போலீசாரை சீனியர் எஸ்.பி., பாராட்டினார்.புதுச்சேரி, காந்தி வீதியை சேர்ந்தவர் ரமேஷ். வீட்டின் கீழ்த்தளத்தில் துணிக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டில் நெல்லித்தோப்பைச் சேர்ந்த சாந்தி என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் ரமேஷ் தனது மனைவியுடன் கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் சாந்தி தனியாக இருந்துள்ளார்.கோயிலுக்கு சென்று விட்டு திரும்பியவர்கள், வீட்டில் வேலைக்காரி இல்லாததது கண்டு சந்தேகித்து, அலமாரியை திறந்து பார்த்த போது சுமார் மூன்றரை லட்சம் மதிப்புள்ள 20 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் பெரியகடை இன்ஸ்பெக்டர் அங்கப்பன், சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் சாந்தி வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். முதலில் மறுத்த அவர், பின்னர் ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து மதியம் 2.30 மணிக்குள் மாயமான 20 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. சுமார் ஒன்றரை மணி நேரத்தில் திருட்டு நகைகளைக் கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டரை, சீனியர் எஸ்.பி., சந்திரன் பாராட்டினார். கைது செய்யப்பட்ட சாந்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ