உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சங்கராபரணியில் மணல் திருட்டால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்

சங்கராபரணியில் மணல் திருட்டால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்

திருக்கனூர் : குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றில் தொடரும் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருக்கனூரை அடுத்த குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றில் தொடர்ந்து இரவு பகலாக அனுமதியின்றி வாகனங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகின்றது. இதனால், திருட்டு மணல் அள்ளும் கும்பல்களிடையே அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்படுகிறது. மேலும், மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் மூலம் உயிரிழப்பு ஏற்படுகின்றது.கடந்த மாதம் தொடர் மணல் திருட்டை தடுக்கும் வகையில் வருவாய் துறை மூலம் சங்கராபரணி ஆற்றில் ஐந்துக்கும் மேற்பட்ட வழிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மணல் அள்ளும் கும்பல் தற்போது வருவாய் துறை மூலம் தோண்டப்பட்ட பள்ளங்களை நிரப்பிவிட்டு மீண்டும் மணல் எடுக்கின்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்து தாசில்தார், போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அக்கும்பல் சென்று விடுகிறது.தொடர்ந்து மணல் எடுப்பதால் குமாரப்பாளையம், தேத்தாம்பாக்கம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சங்கராபரணி ஆற்றில் தொடர் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி