மேலும் செய்திகள்
சாகச பயணத்தை விரும்பும் வெளிநாட்டு பயணிகள்
01-Nov-2024
புதுச்சேரி ; உலக அளவில் சிறந்த பயண பட்டியலில் 2-வது இடம் பிடித்த புதுச்சேரிக்கு லண்டனில் விருது வழங்கப்பட்டது.ஆஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த லோன்லி பிளானட் என்ற பயண ஊடக நிறுவனம், 2025ம் ஆண்டிற்கான சிறந்த பயண இடங்களை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. லோன்லி பிளானட்டின் பயண வழிகாட்டியில் 30 பிரபலமான இடங்கள், நகரங்கள், நாடுகள் மற்றும் பிராந்தியங்களை சுற்றுலா பயணிகள் புத்தாண்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களை குறிப்பிட்டுள்ளது.அதன்படி, சிறந்த நகரங்கள் பட்டியலில், பிரான்ஸ் நாட்டின் துலுாஸின் கால்வாய் கரைகள் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் புதுச்சேரி கடற்கரை 2ம் இடம் பிடித்துள்ளது. பல்கேரியாவின் பான்ஸ்கோ 3ம் இடம் பிடித்துள்ளது. லண்டனில் நடந்து வரும் உலக சுற்றுலா கண்காட்சி புதுச்சேரி அரங்கில் இதற்கான விருதினை லோன்லி பிளானட் பயண ஊடக நிறுவனத்தின் படைப்பு பிரிவு நிர்வாக இயக்குனர் அனி கிரீன்பெர்க் வழங்க தலைமை செயலர் சரத் சவுகான் பெற்றுக்கொண்டார்.இது குறித்து படைப்பு பிரிவு நிர்வாக இயக்குனர் அனி கிரீன்பெர்க் கூறுகையில், 'உலக அளவிலான இந்த சர்வேயில் இடம் பிடித்தது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு ஏற்ப அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்தையும் மேம்படுத்தி புதுச்சேரி இதனை தக்க வைத்து கொள்ள வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில் சுற்றுலா துறை செயலர் ஜெயந்தகுமார் ரே, சுற்றுலா துறை மேலாமளர் சுப்ரமணியன், பி.டி.டி.சி., மேலாளர் ஆஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
01-Nov-2024