உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டிராபிக் ஜாமால் ஸ்தம்பித்த புதுச்சேரி நகரம்; களத்திற்கு வராமல் குறட்டை விட்ட போலீஸ் உயர் அதிகாரிகள்

டிராபிக் ஜாமால் ஸ்தம்பித்த புதுச்சேரி நகரம்; களத்திற்கு வராமல் குறட்டை விட்ட போலீஸ் உயர் அதிகாரிகள்

புதுச்சேரி ராஜிவ் சிக்னல், இ.சி.ஆரில் ஏற்பட்ட கடும் டிராபிக் ஜாமை சரி செய்ய போக்குவரத்து போலீசார் யாரும் வராததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.சுற்றுலா நகரமாக வளர்ந்து வரும் புதுச்சேரியில் வார இறுதி நாட்கள் சுற்றுலா பயணிகளால் நிரம்பிவிடும். பிரதான சிக்னல்களான ராஜிவ், இந்திரா, மரப்பாலம், இ.சி.ஆர்., கொக்குபார்க் பகுதிகளில் சனிக் கிழமை வழக்கமாக டிராபிக் ஜாம் ஏற்படும்.இது குறித்து பல முறை அரசியல் கட்சிகள், பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டியும் டிராபிக்கை ஒழுங்குப்படுத்த போலீசாரால் முடியவில்லை. டிராபிக் ஜாம் பிரச்னை புதுச்சேரியின் தலைவிதிபோல மாறிவிட்டது.தீர்க்க முடியாத இப்பிரச்னையை கண்டு அளுத்து போன உள்ளூர் மக்கள், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வீட்டை விட்டு வெளியே வருவதை குறைத்து விட்டனர்.தவிர்க்க முடியாத அவசர தேவை, முகூர்த்த நாள் என்றால் மட்டுமே வெளியே வருகின்றனர். நேற்றைய தினம் வழக்கமான சனிக்கிழமையுடன், இன்றைய முகூர்த்த நாளுக்கு முந்தை நாள் சேர்ந்து விட்டது.இதனால் ராஜிவ் சிக்னல், இந்திரா சிக்னல், இ.சி.ஆர்., கொக்கு பார்க் என நகரின் அனைத்து பகுதியும் டிராபிக் ஜாமில் சிக்கி தவித்தது. வாகனங்கள் நகர முடியாமல் ஸ்தம்பித்தது.சிக்னல்களை உடனுக்குடன் திறந்து வாகன நெருக்கத்தை தவிர்ப்பதிற்கு பதில், வழக்கம்போல் போக்குவரத்து போலீஸ் குறட்டை விட்டது.சிக்னல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவித்து கொண்டிருப்பதை பற்றி துளியும் கவலைப்படாத போக்குவரத்து போலீசார்,சிக்னலை கடக்க வரும் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் கார்கள் காத்திருக்காமல் அனுப்புவதில் குறியாக இருந்தனர்.போலீசார் சிக்னலில் காத்திருக்கும்மக்களை பற்றி துளியும் சிந்திக்காமல், ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் வீட்டு வேலையாட்கள் போல் செயல்பட்டனர்.நகரப் பகுதி முழுதும் ஏற்பட்ட கடும் டிராபிக் ஜாமில் சிக்கிசரியான நேரத்திற்குசெல்ல முடியாமல் வெகு நேரம் காத்திருந்து எரிச்சலுடன் பொதுமக்கள்கடந்து சென்றனர். நேற்று இரவு 8:00 மணிக்கு, ராஜிவ் சிக்னலை கடந்து செல்லசுமார் 30 முதல் 35நிமிடம் ஆனது.போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சிக்னல்களில், சனி ஞாயிறு மற்றும் முகூர்த்த நாட்களில் கூடுதல் போலீசார் நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் தவறிவிட்டனர்.

எஸ்.பி., வெளியே வருவாரா?

ராஜிவ், இந்திரா சிக்னலில் ஏற்படும் கடும் டிராபிக் பிரச்னைகளை போக்குவரத்து எஸ்.பி., வெளியில் வந்து பார்க்க வேண்டும். ஆட்சியாளர்கள் அக்கார்டு ஓட்டல் வந்தால் மட்டுமே, ராஜிவ் சிக்னலை எட்டிப் பார்க்கும் எஸ்.பி., சனி, ஞாயிறு மற்றும் முகூர்த்த நாட்களில் ஏற்படும் டிராபிக் பிரச்னைகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறையில் அமர்ந்து கொண்டு குறைகளை கேட்பதிற்கு பதில் போலீஸ் உயர் அதிகாரிகள் களத்திற்கு நேரில் வந்து மக்கள் தினசரி படும் அவஸ்தைகள், டிராபிக் பிரச்னையை சரி செய்ய முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Senthil Senthil
பிப் 02, 2025 11:45

எந்த அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் சரி உயர் அதிகாரியாக இருந்தாலும் சரி அனைவரும் சிக்னலில் நின்று செல்ல வேண்டும் அப்படி இருந்தால் தான் மக்கள் படும் கஷ்டம் இவர்களுக்கு தெரியும்