உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி காங்., நிர்வாகிகள் டில்லியில் ராகுலுடன் ஆலோசனை

புதுச்சேரி காங்., நிர்வாகிகள் டில்லியில் ராகுலுடன் ஆலோசனை

புதுச்சேரி : புதுச்சேரி காங்., கமிட்டி நிர்வாகிகள் நேற்று டில்லியில் ராகுலை சந்தித்து, எதிர்வரும் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். புதுச்சேரி காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் தலைவர் சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட 27 பேர் டில்லி சென்றனர். அவர்கள் நேற்று மதியம் 12:00 மணிக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, ஜன்பத் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது, புதுச்சேரியில் காங்., கட்சியின் செயல்பாடு, எதிர்வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து கட்சி சார்பில் விசாரித்த தயாரித்த பட்டியலை ராகுலிடம் காண்பித்து, இந்த பட்டியலை நாளை (இன்று) ஜனாதிபதியை சந்தித்து வழங்க உள்ளதை விளக்கினர். தொடர்ந்து இக்குழுவினர், இன்று காங்., அகில இந்திய தலைவர் கார்கேவை சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசிக்கின்றனர். பின், ஜனாதிபதியை சந்தித்து, புதுச்சேரி அரசின் ஊழல் பட்டியல் சமர்பிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ