உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊரணி பொங்கல் வழிபாடு

ஊரணி பொங்கல் வழிபாடு

பாகூர் : அரங்கனூர் எரமுடி அய்யனார் கோவிலில் ஊரணி பொங்கல் வழிபாடு நேற்று நடந்தது.பாகூர் அடுத்த அரங்கனூர் முத்தாலம்மன், எரமுடி அய்யனார் கோவில் ஆடி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 5 நாட்கள் நடந்த இந்த விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், வீதியுலாவும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று எரமுடி அய்யனாருக்கு ஊரணி பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை