மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
வில்லியனூர் : விபத்தில் மூளைச்சாவு அடைந்ததால் உடல் உறுப்புகளை தானம் வழங்கிய வில்லியனூர் சிறுமியின் படத்திற்கு நமச்சிவாயம் எம்.எல்.ஏ., தலைமையில் ஊர் முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.வில்லியனூரில் இருந்து பழனிக்கு சுற்றுலா சென்ற பஸ் கடந்த 15ம் தேதி திருச்சி அருகே விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.வில்லியனூர் பரசுராமபுரத்தில் வசிக்கும் சிங்காரவடிவேலு மகள் சிந்தாமணி, 8, உட்பட 37 பேர் படுகாயமடைந்தனர். இதில் சிந்தாமணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. சிங்காரவடிவேலு-மீனாட்சி தம்பதியர் 17ம் தேதி தனது மகள் சிந்தாமணியின் இரு கண்கள், சிறுநீரகம், இதயம், கணையம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். உடல் உறுப்புகள் தானம் வழங்கிய சிறுமி சிந்தாமணி உருவப் படத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ., நமச்சிவாயம் தலைமையில் கண்ணபிரான், ஏகாம்பரம், ஜனார்த்தனன் உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
3 hour(s) ago | 1
5 hour(s) ago | 1