மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
42 minutes ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
45 minutes ago
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
1 hour(s) ago
புதுச்சேரி : 'மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக புதுச்சேரி அரசு தனது கொள்கை முடிவைத் தெரிவிக்க வேண்டும்' என, மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., கூறினார்.இதுகுறித்து நிருபர்களிடம், அவர் கூறியதாவது:நாடு முழுவதும், அடுத்த கல்வியாண்டில் இருந்து, மருத்துவப் படிப்பிற்கு ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வை நடத்தப் போவதாக, மத்திய அரசு மீண்டும் அறிவித்துள்ளது.மருத்துவப் படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களை வஞ்சிக்கும் செயல். இது, அனைத்து மாணவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். இந்த அறிவிப்பைத் திரும்ப பெற வேண்டும் என்றும், இதுதொடர்பாக வழக்கு தொடரப்படும் என்றும் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விஷயத்தில் தனது கொள்கை முடிவை புதுச்சேரி அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இதிலும் மவுனம் காத்து, காலம் கடத்துவது மாணவர்களைப் பாதிக்கும்.
கல்வியைப் பொறுத்தவரை, தமிழகத்துடன் புதுச்சேரி ஒன்றிணைந்து இருக்கும் நிலையில், பொது நுழைவுத் தேர்வு விஷயத்தில், தமிழக அரசுடன் இணைந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செய்ய வேண்டும்.மொத்த மதுபான உற்பத்தியாளர்களுக்கு விற்பனை வரி சலுகை என்ற பெயரில் ஆண்டுதோறும் 160 கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.இதை, அ.தி.மு.க., தொடர்ந்து சுட்டிக் காட்டியதால், கூடுதல் கலால் வரியை ரங்கசாமி கொண்டு வந்தார். இதன்மூலம் வரி வருவாய் ஆண்டுக்கு 310 கோடி ரூபாய் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. மதுபானங்களின் ப்ரூப் லிட்டரை கணக்கிட்டு கலால் வரி தற்போது விதிக்கப்படுகிறது. மதுபானம் மீது அதிகப்பட்ச சில்லறை விலை குறிப்பிடப்பட உள்ளதால், அதனடிப்படையில் விற்பனை விலையை கணக்கிட்டு வரி விதிக்க வேண்டும். அதுபோல வரி விதித்தால், 250 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு கூடுதலாக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. கலால் துறையில் 180 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளனர். இதை, வசூலிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
42 minutes ago
45 minutes ago
1 hour(s) ago