உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்காலில் ஆடிக் கிருத்திகை

காரைக்காலில் ஆடிக் கிருத்திகை

காரைக்கால் : காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதர் கோவிலில் ஆடிக் கார்த்திகை விழாவையொட்டி சுப்ரமணியர் சாமிக்கு வெள்ளிக்காப்பு அலங்காரம் நடந்தது.காரைக்காலில் தலத்தெருவில் சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா நேற்று நடந்தது. இதற்காக சுப்ரமணியர் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.விழாவையொட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு வெள்ளிகாப்பு அலங்காரம் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணியர் வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்