உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

திருக்கனூர் : திருக்கனூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நாளை நடக்கிறது.முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு அம்மன் வீதியுலாவும் நடந்து வருகிறது. விழாவில், நாளை (27ம் தேதி) காலை 11.30 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மதியம் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாகை வார்த்தல் நிகழ்ச்சி 28ம் தேதி பகல் 12 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை