உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.கே.சி., பள்ளியில் அறிவியல் கண்காட்சி

என்.கே.சி., பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி : குருசுகுப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. அறிவியல் கண்காட்சி துவக்க விழாவிற்கு பள்ளி துணை முதல்வர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியை அபிராமி வரவேற்றார். விரிவுரையாளர் பங்கஜவல்லி கண்காட்சியைத் துவக்கி வைத்தார். கண்காட்சியை அறிவியல் ஆசிரியர்கள் மரிய ஆரோக்கியம், மரிய ஜோஸ் பின் உள்ளிட்டவர்கள் மேற்பார்வையில் நடந்தது. கண்காட்சியில் இடம்பெற்ற மாணவ மாணவிகள் அறிவியல் படைப்புகளில் சிறந்தவைகளை ஆசிரியர்கள் வாசு, குப்புசாமி ஆகியோர் தேர்ந்தெடுத்து, பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஓவியர் சுகுமாறன், ராமமூர்த்தி, ஜெயராஜ் ஆகியோர் செய்தனர். ஆசிரியர் கிளாண்டின் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ