உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம்

வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி மாநில பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் வாழ்வாதார வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முத்திரையர்பாளையம் பழங்குடியினர் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநிலத் தலை வர் ராம்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செல்வராஜ், தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பழங்குடி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், கதிர்காமம் தொகுதியில் வசிக்கும் ஏழை பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப்பட்டாவுடன் தொகுப்பு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை