| ADDED : ஆக 29, 2011 11:02 PM
புதுச்சேரி : போலீஸ் துறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுடன் டி.ஐ.ஜி., கலந்துரையாடல் நடத்தினார். சபரி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள், போலீஸ் துறையின் செயல்பாட்டை தெரிந்து கொள்ளும் வகையில் நேற்று காலை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. டி.ஐ.ஜி., அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலில் டி.ஐ.ஜி., சுக்லா கலந்து கொண்டார். கலந்துரையாடலில் புதுச்சேரியில் வன்முறை அதிகரித்து வருவது பற்றியும், அவற்றை எப்படி தடுப்பது, அன்னா ஹசாரே பற்றியும், என்கவுன்ட்டர் தேவையா என்பது பற்றியும் டி.ஐ.ஜி., யிடம் மாணவர்கள் கேள்வி கேட்டு விளக்கம் பெற்றனர். புதுச்சேரியில் நடைபெற்று வரும் குற்றங்களை தடுப்பதற்கு போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைகள், போலீஸ் துறையின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றனர். மாணவர்களுக்கு, போலீசாரின் செயல் பாடுகள், அவர்களின் பணி,போலீஸ் நிலைய தொலைபேசி எண்களை டி.ஐ.ஜி., வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சரவணன் உள்ளிட்ட ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.