உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடு, சொத்து வரி செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவிப்பு

வீடு, சொத்து வரி செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட வீடு, சொத்து வரி நிலுவையை இன்று முதல் செலுத்தலாம் என, நகராட்சி அறிவித்துள்ளது.புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி செய்திக்குறிப்பு:புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட வீடு, சொத்து வரி நிலுவைத்தாரர்கள் 2025-26ம் ஆண்டிற்கான வீடு, சொத்து மற்றும் திடக்கழிவு அகற்றும் கட்டணத்தை இன்று (4ம் தேதி) முதல் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, வீடு, சொத்து வரி செலுத்துவோர் கம்பன் கலை அரங்கம், முத்தியால்பேட்டை வணிக வளாகம், நெல்லித்தோப்பு மேரி அலுவலகம், முதலியார்பேட்டை மேரி அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள வீட்டு வரி வசூல் மையங்களில் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும் செலுத்தலாம்.வீடு, சொத்து வரியினை ஆன்லைன் மூலம் www.lgrams.py.gov.inஎன்ற இணையதள முகவரியிலும், டெபிட், கிரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம் என, தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ