உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர்களுக்கு கிடுக்கிப்பிடி புதுச்சேரி நகராட்சி அதிரடி

பேனர்களுக்கு கிடுக்கிப்பிடி புதுச்சேரி நகராட்சி அதிரடி

புதுச்சேரி : புதுச்சேரி நகர பகுதியில் கண்ட மேனிக்கு பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டு வருகின்றன. கோர்ட் தலையிட்ட பிறகு இப்போது பேனர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கல்யாணம், காது குத்து, வளைகாப்பு என வேற வடிவங்களில் சட்ட விரோத பேனர்கள் மீண்டும் முளைத்து வருகின்றன.இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கு சென்ற நிலையில், தற்போது புதுச்சேரி நகராட்சியும் சட்ட விரோத பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அனுமதி இன்றி வைக்கும் திருமண பேனர்களையும் அதிரடியாக அகற்றி வருகின்றனர். திருமண மண்டபங்களுக்கு வெளியே சட்ட விரோதமாக பேனர்களை வைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ