உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால்களில் மலைபோல குவியும் பிளாஸ்டிக் கழிவுகளால் பெரும் சிக்கல்

வாய்க்கால்களில் மலைபோல குவியும் பிளாஸ்டிக் கழிவுகளால் பெரும் சிக்கல்

புதுச்சேரி : கழிவு நீர் வாய்க்கால்களில் எரியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளன. ஆண்டுதோறும் மழைக்காலத்தின்போது, தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும், வீடுகளிலும் மழைநீர் புகுவது வாடிக்கையாகி விட்டது. லேசான தூறலுக்கே நகரின் பிரதான வீதிகளில் தண்ணீர் தேங்கி விடுகிறது. நகரின் பிரதான வடிகால் வாய்க்கால்கள், கழிவுநீர் வாய்க்கால்களை ஆண்டுதோறும் பொதுப் பணித் துறையினர் தூர்வாரி பராமரித்தாலும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இதற்குக் காரணம், வாய்க்காலில் தாறுமாறாக குப்பைகளை எரிவதுதான். மேலும், பிளாஸ்டிக் கழிவுகளும் வாய்க்கால் அடைப்புக்கு முக்கிய காரணமாக திகழ்கின்றன.எளிதில் மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் பொருட்கள், வாய்க்கால் அடைப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்தது. அத்தடை உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்தாததால், அவற்றின் பயன்பாடு தொடர்கிறது. இதன் காரணமாக, நகரின் பெரும்பாலான கழிவுநீர் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல குவிந்து அடைப்பை ஏற்படுத்தி கொண்டுள்ளன.பூமியான்பேட்டை குண்டுசாலை கால்வாய், எல்லப்பிள்ளைசாவடி வாய்க்கால் உள்ளிட்ட பிரதான வடிகால் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து, கழிவுநீர் செல்ல தடையாக உள்ளன. வாய்க்கால்களை தூர் வாருவதும், பிளாஸ்டிக் கழிவுகளால் மீண்டும் அடைத்துக் கொள்வதும் தொடர் கதையாக உள்ளதால், இந்த விஷயத்தில் அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை