உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மோதலை தடுத்தவருக்கு சோடா பாட்டில் குத்து

மோதலை தடுத்தவருக்கு சோடா பாட்டில் குத்து

கிருமாம்பாக்கம் : சாராயக்கடையில் ஏற்பட்ட மோதலைத் தடுத்தவரை தாக்கிய கூலித்தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியக்கோவில் அடுத்த உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த சேகர், 30, மதியழகன், 28. கூலித்தொழிலாளி. உறவினர்களான இவர்கள் அதே பகுதியில் உள்ள சாராயக்கடையில் நேற்று முன்தினம் சாராயம் குடித்தனர். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த வடிவேல், 30, இருவரும் தகராறு செய்வதை மறித்தார். இதனால் ஆத்தரமடைந்த மதியழகன் அருகில் கிடந்த சோடாபாட்டிலால் வடிவேல் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த வடிவேல் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மதியழகனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை