மேலும் செய்திகள்
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
9 minutes ago
யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
11 minutes ago
கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறப்பு
11 minutes ago
கோவை மெட்ரோ திருத்திய திட்ட அறிக்கை
14 minutes ago
காரைக்கால் : அரசு பள்ளிகளில் கிராமப்புற அளவில் சாதனை படைத்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக போலீசார் சார்பில் முதன்முறையாக பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. காரைக்காலில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களை மாவட்ட நிர்வாகம் சுதந்திர தின விழாவில் கவுரவித்து பரிசுகள் வழங்குவது வழக்கம். அரசு மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கிராமப்புற அரசுப் பள்ளிகளில், பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக காரைக்காலில் சீனியர் எஸ்.பி., ஸ்ரீகாந்த் ஏற்பாட்டின்படி காரைக்காலைச் சேர்ந்த 19 கிராமப்புற அரசுப்பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்குப் பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. இதுபோல் வழங்கப்படுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் சந்திரகாசு பரிசுக் கோப்பைகளை வழங்கினார். விழாவில் கலெக்டர் பிராங்க்ளின் லால்டின்குமா, சீனியர் எஸ்.பி., ஸ்ரீகாந்த், எஸ்.பி., வெங்கடசாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
9 minutes ago
11 minutes ago
11 minutes ago
14 minutes ago