மேலும் செய்திகள்
விஜய் மீது வழக்கு போட்டு கைது செய்தால் வழக்கே நிற்காது: அண்ணாமலை
1 hour(s) ago | 7
புதுச்சேரி : புதுச்சேரி யோகா அமைப்பு சார்பில் யோகா விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண நிலையத்தில் நடந்த போட்டிக்கு சங்கத் தலைவர் எழிலன் சுப்ராயன் தலைமை தாங்கினார். பாலன் முன்னிலை வகித்தார். போட்டியை சுற்றுலாத் துறை உதவி இயக்குனர் சுப்ரமணியன், கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் பசுவலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். சபரிமுத்து, ஆனந்த், மரியே ஆண்டனி மிச்சேல், சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இரண்டு நாட்கள் நடக்கும் இப்போட்டியில் புதுச்சேரி, தமிழக பகுதியிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். ஆறு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
1 hour(s) ago | 7