| ADDED : ஆக 22, 2011 10:51 PM
புதுச்சேரி : புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவையின் சிந்தனை அரங்கம், ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடந்தது. எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதுச்சேரி முதன்மை மேலாளர் உத்திராபதி, ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மக்கள் சேவைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சிக்கு மன்னர்மன்னன் தலைமை தாங்கினார். டாக்டர் வனஜா வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித் துறையை உடனடியாக அமைக்க வேண்டும். உழவர்கரை நகராட்சியைச் சேர்ந்த அனைத்து பகுதியிலும் மழைக்கு முன்பாக கழிவுநீர் வாய்க்கால்களைத் தூர் வாரி சாலையில் மழை நீர் தேங்காமல் இருக்கச் செய்ய வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முழுமையான அளவில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்காத நிலையில், காலாண்டுத் தேர்வை அக்டோபர் மாதத்திற்குத் தள்ளி வைக்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.