உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய தேர் செய்யும் பணி துவக்கம்

புதிய தேர் செய்யும் பணி துவக்கம்

காரைக்கால் : காரைக்கால் கைலாசநாதர் கோவிலுக்கு 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் செய்யும் பணி துவங்கியது. காரைக்கால் கைலாசநாதர் கோவிலுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்ய, அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான தொகையை நன்கொடை மூலம் பெற்று செயல்படுத்த கூறியது. இதையடுத்து நன்கொடை பெறும் பணி நடந்தது.அம்மையார் கோவில் பின்புறம் தேர் செய்யும் பணிக்கான பூஜைகள் நேற்று தொடங்கியது. புதிய தேர், 15 அடி உயரம், 13 அடி அகலம் கொண்டதாக இருக்கும். இப்பணியை காரைக்குடியைச் சேர்ந்த ஸ்தபதி ராதாகிருஷ்ணன் மேற்கொண்டு வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி