மேலும் செய்திகள்
விஜய் மீது வழக்கு போட்டு கைது செய்தால் வழக்கே நிற்காது: அண்ணாமலை
1 hour(s) ago | 7
புதுச்சேரி : ரவுடிகளிடமிருந்து பாதுகாப்பு கோரி, வியாபாரிகள் முதல்வரிடம் மனு கொடுத்தனர். புதுச்சேரி காந்தி வீதி, அஜந்தா சிக்னல் அருகில் உள்ள கடை வியாபாரிகள் முதல்வரை சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறியதாவது: இப்பகுதியில் டீக் கடை, பெட்டிக் கடை, முடிதிருத்தும் கடை, சைக்கிள் கடை உள்ளிட்ட பலதரப்பட்ட வியாபாரிகள் உள்ளனர். நாங்கள் ரவுடிகளால் மனதளவிலும், பொருள் அளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். போலீசில் பல முறை புகார் தெரிவித்தும், ரவுடிகள் மிரட்டுகிறார்கள். கடந்த 21ம் தேதி காந்தி வீதியில் டீக் கடை நடத்தும் சுந்தரமூர்த்தி என்பவரை மாமூல் கேட்டு மிரட்டி, பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்தனர். இந்த நிலை நீடிக்காமல் இருப்பதற்கு போலீஸ் துறைக்கு அதிகப்படியான அதிகாரத்தை வழங்க வேண்டும். இப்பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் முகாமிட வேண்டும். வியாபாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க ரவுடிகளின் அட்டகாசத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
1 hour(s) ago | 7