மேலும் செய்திகள்
விஜய் மீது வழக்கு போட்டு கைது செய்தால் வழக்கே நிற்காது: அண்ணாமலை
1 hour(s) ago | 7
காரைக்கால் : காரைக்கால் பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகைகள் நடந்தது. இஸ்லாமியர்கள் ஒரு மாதம் நோன்பு இருந்து, ரம்ஜான் விழாவை கொண்டாடுகின்றனர். காரைக்காலில் ரம்ஜான் விழா கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் புத்தாடை அணிந்து ரம்ஜானை கொண்டாடினர். காரைக்கால் மீராப்பள்ளியில் காலை 7 மணிக்கும், செய்கு மொய்தீன் பள்ளியில் காலை 8.30 மணிக்கும், பெரிய பள்ளிவாசலில் 9 மணிக்கும், புளியங்கொட்டை சாலை ஹுசைனியில் 9.30 மணிக்கும், மொய்தீன் பள்ளி வாசல் உள்ளிட்ட ஏராளமான பள்ளி வாசல்களில் நேற்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டி அனைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு ரம்ஜானை வரவேற்று பட்டாசுகள் வெடித்து இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.
1 hour(s) ago | 7